/ கவிதைகள் / பாவலர் போற்றும் மகாவித்துவான் மே.வீ.வே.

₹ 250

மகாவித்துவான் மே.வீ.வேணுகோபால பிள்ளை முத்து விழாவில் வெளியான கவிதைத் தொகுப்பின் மறுபதிப்பு நுால். தமிழ் இலக்கிய உலகில் பதிப்பாசிரியராகவும், படைப்பாசிரியராகவும் விளங்கியவர். இலக்கணத் தாத்தா என்ற சிறப்புக்கு உரியவர். புத்தகத்தின் துவக்கத்தில் மகாவித்துவானின் வாழ்க்கை வரலாறு விரிவாக தரப்பட்டுள்ளது. அறிஞரின் வரலாற்றை அ.கி.பரந்தாமன் எளிய நடையில் எழுதியுள்ளார். தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், ம.பொ.சிவஞானம், தீபம் நா.பார்த்தசாரதி, கி.வா.ஜ., என அறிஞர்களின் படைப்புகளுடன் வெளிவந்துள்ளது. தமிழ் இலக்கியப் பரப்பில் சாதித்தவர்களின் கவிதைகளையும், உரைகளையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பாக அமைந்துள்ள நுால்.– முகிலை ராசபாண்டியன்


புதிய வீடியோ