/ கவிதைகள் / பேனா பேசுகிறது...
பேனா பேசுகிறது...
வறுமை, காதல், சமூகம், தாய்மை, இளமை, அரசியல் என்ற பொருள்களில் படம் பிடித்துக் காட்டும் கவிதை நுால். காதலின் மெல்லிய உணர்வுகளைத் தாங்கியுள்ளது. மனதில் பதியும் வகையில், ‘கள்ளிப்பூ கூட அழகாய் இருக்கிறது, தண்ணீர் விடுவது நீயாக இருப்பதால்; கஷ்டமான இலக்கணப் பாடம் கூட எளிதாகிறது, நீ உதாரணமாக இருப்பதால்; கண்மை ஊற்றி கருவிழி பேனாவால் மனத்தாளில் எழுதினாய் காதல் தேர்வு’ என்ற வரிகளில் உணர்வு ஊற்றெடுக்கிறது. தீப்பெட்டிக்குள் இருக்கும் தீக்குச்சி போலத் தான் குழந்தை தொழிலாளர் சுதந்திரம் என பாடுகிறது.போலித் துறவி, விவசாயி பற்றிய கவிதைகள் சமூக அவலத்தைச் சாடுகின்றன. உலகளாவிய அமைதியை நாடுகிறது. மனத்தை வருடும் கவிதைகளின் தொகுப்பு நுால்.-– புலவர் சு.மதியழகன்