/ கவிதைகள் / பெண்ணில் குளிர்ந்த மழை
பெண்ணில் குளிர்ந்த மழை
அழகிய கவிதை வரியை தலைப்பாக உடைய நுால். வாசகர்களின் உணர்ச்சி, கற்பனையை துாண்டி கருத்து அறிவிப்பதாக அமைகிறது. சிந்தனையோட்டத்தை மேம்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. இந்த புத்தகத்தில் மணல் வீடு, இலைகளின் மொழி, அகக்கடல், கனவுத் தடயங்கள், மனதேந்திய அன்பு என்ற தலைப்புகளில், 50க்கும் மேற்பட்ட கவிதைகள் இடம் பெற்றுள்ளன.பெண்ணில் குளிர்ந்த மழை என்ற தலைப்பிலே ஒரு கவிதை இடம் பெற்றுள்ளது. அதில், கருமேகக் குவியலிலிருந்து கிளம்பிய மழைத்துளி, பெண்ணின் உடல் நனைந்து இம்மண்ணில் விழுந்து, இதுவரை இல்லாத குளுமை அடைந்து ஆனந்த துள்ளல் இட்டது என உணர்வும் அழகியலும் வெளிப்பட விவரிக்கிறது.இதுபோல ஒவ்வொரு கவிதைகளும் அழகு மிளிர படைக்கப்பட்டுள்ளன.– வி.விஷ்வா