/ புத்தக மதிப்புரை / பேரறிஞர் அண்ணாதுரை

₹ 150

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்துள்ள நுால். பன்முகத்தன்மையை நிரல்பட தொகுத்து தருகிறது. குழந்தை பருவம், கல்லுாரி காலம், பொது வாழ்வில் ஈடுபாடு, பன்முக ஆற்றல், தலைமை பண்பு, பேராண்மையை அறிய செய்கிறது. அரசியல், இலக்கியம், எழுத்தாற்றல், மேடை பேச்சாற்றல் என வல்லவராகத் திகழ்ந்ததை தெளிவாக அறிய தருகிறது. அரசியல் களத்தில் கண்ட எதிர்ப்புகள், முரண் பாடுகள் மற்றும் போராட்டங்களை பதிவு செய்கிறது. தி.மு.க., தோற்றம், வளர்ச்சி, கோட்பாடுகளை முன்வைக்கிறது. அரசியல் நிகழ்வுகளை வலுவாக காட்சிப் படுத்துகிறது. தத்துவ மொழிகள், கடிதங்கள், சாதனைகளை சான்றுகளோடு முன்வைக்கும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


புதிய வீடியோ