/ கதைகள் / பேசாப் பொருள்
பேசாப் பொருள்
சமூகத்தில் நிலவும் சிக்கல்களை வெளிச்சமிட்டு காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். அவலங்களுக்கு தீர்வை சொல்லி, எடுத்துக் கொண்ட மையப்பொருளை நறுக்கென நெஞ்சில் பதியும் வண்ணம் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதையும் கூர்மையான சிற்றுளியால் வடிவமைக்கப்பட்ட சிற்பத்தைப் போல் காட்சி தருகின்றன. பெற்றோர் அன்பும் அரவணைப்புமில்லாத பிள்ளை மனதளவில் பாதிக்கப்படுவதை, எதிர்காலம் கேள்விக்குறியாவதை, ‘ஏ.ஐ.டிங்கு’ கதை பட்டவர்த்தனமாய் விளக்குகிறது. ஆசை, விருப்பம், தியாகத்தை மனதிற்குள் புதைத்து வாழும் பெண்களின் நிலையை படம் பிடிக்கிறது, ‘வானம்பாடி’ சிறுகதை. ஒவ்வொரு கதையும் உள்ளத்துக்குள் ஊடுருவி உணர்வைத் துாண்டி கிளர்ச்சியுறச் செய்கின்றன. மனதோடு பேசும் கதைகளின் தொகுப்பு நுால். – ஊஞ்சல் பிரபு




