/ பெண்கள் / பெயரற்றவர்களின் குரல்
பெயரற்றவர்களின் குரல்
பெண்களின் அவலங்களையும் கண்ணீருடன் பதிவு செய்துள்ள நுால். குடும்ப உறுப்பினர்களால் பாலியல் வன்முறைக்குள்ளான பெண்களின் அனுபவம் சோக சித்திரமாக தீட்டப்பட்டுள்ளன. சோதனை வாழ்வில் விடுவிக்க முடியாத மனநிலையை அறியத் தருகிறது. ஒருவகை துயரத்தை வெளிப்படுத்துகிறது. அவலத்தை கூர்மையான சொற்களால் வெளிப்படுத்துகிறது. தாயே, மகளுக்கு எதிரியான சம்பவம் கண்ணீரை வரவழைக்கும். வீட்டுக் குள்ளும், வெளியிலும் நடக்கும் பாலியல் தொல்லையை வெளிப்படுத்துகிறது. அவற்றை அலட்சியமாக கடப்பதால், ஏற்படும் விளைவுகளை எடுத்துரைக்கும் நுால்.– மதி