/ கட்டுரைகள் / பிடிச்சிருக்கா

₹ 150

வாழ்க்கை மேம்பாட்டிற்குத் தேவையான தத்துவங்களை விளக்கும் நுால். சுறுசுறுப்பாக இருப்பதற்கு உடற்பயிற்சி போதும். சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு மனப்பயிற்சியும், விழிப்புணர்வும் அவசியம் என்கிறார். உரிய நேரத்தில் ஆற்றலையும் தனித்திறமையையும் கண்டுபிடிக்காதவர் பின்தங்கிவிடுவர் என்கிறார். சாமானியன் என்று எண்ணிக் கொண்டிருக்காமல், கலாம் போல உயர்ந்த மனிதராக மாறியாக வேண்டும். அதற்கு உரிய ஆற்றல், திறமையை உரிய நேரத்தில் கண்டு உணர வேண்டும். காத்திருக்கப் பழக வேண்டும். பொறுமையை வளர்க்க வேண்டும்.வெற்றியின் இலக்கணமாக தொடர் தோல்விகளுக்குத் துவண்டு விடாது, முயற்சிகளை ஆராய்ந்து துறைசார் ஆலோசனை பெற்று நடைமுறைப்படுத்தி வெற்றியைப் பெறலாம். வெற்றியை அடையும் வழியை எளிய மொழி நடையில் விளக்குகிறது. – முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்


புதிய வீடியோ