/ இசை / பொன்னி ஒரு கவிதை
பொன்னி ஒரு கவிதை
சிறுவர் -– சிறுமியர் உள்ளத்தில் பதியும் வண்ணம், வண்ணக் கலவைகளாய் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து நயமுடன் படைக்கப்பட்டுள்ள பாடல்களின் தொகுப்பு நுால். அன்பு, அறம், ஒற்றுமை, பெரியோரை பேணுதல், எவ்வுயிரையும் நேசித்தல் என்ற போதனை களஞ்சியமாய் வழிகாட்டுகிறது. வள்ளுவர் நெறிகளில் வாழ்வோரே வானுயரம் வளர்ந்து புகழ் பெறுவர் என்ற கருத்தில் முதல் கவிதை உள்ளது. ‘வானம் பொழியும் மழை போல வறியோர்க்கு உதவணும் நதி போல’ போன்ற வைர வரியாக அறிவுரைகள் உள்ளன. ‘இருளின் இரவே விடியல் கொண்டு வா, பெருகும் ஒளியே பேதமை கொண்டு போ’ என பாடி அறிவு, ஆற்றலை விசாலப்படுத்துகிறது. பொன்னி என்ற சுட்டிப் பெண்ணை மையமாக வைத்து சொக்க வைக்கும் வண்ணம் எழுதப்பட்டுள்ள பாடல் நுால். – டாக்டர் கார்முகிலோன்




