/ பொது / பூச்செண்டுக் காலங்கள்
பூச்செண்டுக் காலங்கள்
கல்லுாரி மாணவர்களின் கூட்டு முயற்சியால், 53 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த பூச்செண்டு இதழ் குறித்து விவரிக்கும் நுால். அன்றைய அரசியல், கல்லுாரி வாழ்க்கை, சமூகம், முன்னோடியாக இருந்த ஆளுமைகள் குறித்து பகிர்கிறது.டிக்கெட் இன்றி பயணம் செய்ய, 14 ரயில்கள், நகைச்சுவை, கேள்வி – பதில், அன்றைய திருமண பத்திரிகை போன்ற தகவல்கள் உள்ளன. ஒவ்வொரு படைப்பும் ஆளுமைகள் பார்வையில் தரப்பட்டுள்ளன. இதழ்களுக்கு படைப்பு அனுப்ப விரும்புவோருக்கு உதவும் நுால்.– டி.எஸ்.ராயன்