/ கவிதைகள் / போர் எதிர்ப்புக் கவிதைகள்
போர் எதிர்ப்புக் கவிதைகள்
போருக்கு எதிராக உலக அளவில் கவிஞர்கள் பல காலக்கட்டங்களில் எழுதிய படைப்புகளின் மொழிபெயர்ப்பு நுால். ரஷ்யா – உக்ரைன் மோதலால் அழிவு, காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலால் அலைக்கழிப்பு என வருத்தும் செய்திகளுக்கு ஊடே, போர் கொடூரத்தை எடுத்துரைக்கும் விதமாக அமைந்துள்ளன. உலக புகழ் பெற்ற கவிஞர்களின் படைப்புகள் இடம் பெற்று உள்ளன. கேரளாவில் பிரபல கவிஞர் சச்சிதானந்தன் படைப்பு ஒன்றும் இடம்பெற்று உள்ளது. ஒவ்வொரு கவிதையும் அமைதி வாழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன. போரால் ஏற்படும் வலியை அனுபவங்கள் வழியாக வெளிப்படுத்துகின்றன. போரற்ற உலகம் நோக்கிய பார்வையை முன் வைக்கின்றன. அமைதியை முன் வைத்து சிந்தனையை வெளிப்படுத்தும் கவிதை தொகுப்பு நுால். – ஒளி




