/ கதைகள் / கைதி எண் 9658

₹ 558

தமிழக அரசியல் பரப்பில் ஏழை மக்களுக்காக போராடிய கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் அரசியல் வாழ்க்கையை விரித்துரைக்கும் நுால். சிறை கொடுமைகள், வன்முறைகள், அராஜகங்கள் கண்முன் நிகழ்வது போலவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் நலப்போராட்டங்களில் அஞ்சா நெஞ்சத்தோடு களங்களில் இறங்கியதை எடுத்துரைக்கிறது. மனிதநேய கோட்பாடுகளை பின்பற்றிய எளிய வாழ்க்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறைகளில் கழித்த கொடுமையான நாட்களை விளக்கி, செய்திகளை அள்ளி தருகிறது. தீண்டாமைக்கு எதிரான சீற்றங்கள், எதிர்கொண்ட வழக்குகள் உணர்ச்சி மேலீட்டோடு முன்வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வேரூன்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் வரலாற்றையும் உள்ளடக்கியுள்ள நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


புதிய வீடியோ