/ வாழ்க்கை வரலாறு / பேராசிரியர் சாலை இளந்திரையன் புலமை நலம்
பேராசிரியர் சாலை இளந்திரையன் புலமை நலம்
அறிவியக்க பேரவை தலைவராகவும், டில்லி பல்கலைக் கழக தமிழ்த் துறை தலைவராகவும் பணியாற்றியவர் பேராசிரியர் சாலை இளந்திரையன். அறிவியல் ரீதியான சிந்தனையை வளர்க்க முயன்றனர். அவரது இணையர் பேராசிரியை சாலினி இளந்திரையனுடன் இந்த பணியில் ஈடுபட்டு வந்தார். இவர்களின் தமிழ் மற்றும் அறிவியக்கத் தொண்டு மற்றும் வாழ்க்கை பற்றி எடுத்துக் கூறும் நுால்.சிறு கிராமத்தில் பிறந்து, கல்வியால் உயர்ந்தவர். உரைவீச்சு என்ற அறிவு எழுச்சிக் கவிதைகள் புனைந்தவர். அவரது செயல்பாடு பற்றி பல அறிஞர்கள் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால் இது. கல்வி, சமூகப் பணி மற்றும் வாழ்க்கை பற்றி சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.– பாவெல்