/ வாழ்க்கை வரலாறு / புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறுபிறவியெடுத்த வரலாறு

₹ 300

திரையுலகில் நாடோடி மன்னனாய் வாழ்ந்து, மறைந்தும், மறையாமல் நிரந்தரமாக மக்கள் மனதில் குடியிருக்கும் கோவில், எம்.ஜி.ஆர்., என்றால் மிகையாகாது. புரட்சித் தலைவர் உடல்நலம் குன்றிய கால கட்டத்தில், அவருக்கு என்னென்ன நோய் தாக்குதல்... எத்தகைய சிகிச்சைகளை எந்தெந்த சிறப்பு மருத்துவர்கள் மேற்கொண்டனர் என்ற விபரங்களை, நுாலாசிரியர் ஹண்டே மிகத் தெளிவாக இந்நுாலில் குறிப்பிட்டுள்ளார்.மக்கள் திலகத்தின் இதயத்தோடு நெருக்கமாக இருந்து வெற்றிப் பாதையில் பயணித்து, எம்.ஜி.ஆரின் வரலாற்றை எழுதிய ஹண்டே என்றென்றும் பாராட்டுக்குரியவர் என்பதை, இந்நுாலை படிப்பதன் மூலம் உணரலாம்.– மாசிலா இராஜகுரு


புதிய வீடியோ