/ இசை / இராசா தேசிங்கு
இராசா தேசிங்கு
ராஜா தேசிங்கு வரலாற்றை நாட்டுப்புற கதைப்பாடலாக விவரிக்கும் நுால். செஞ்சிக் கோட்டை வரலாறு, ஆட்சி புரிந்தோர் பற்றி தெரிவிக்கிறது. மேரு மலையில் தவம் செய்து பெற்ற குதிரையை நவாப்பிற்கு பரிசளித்தான். அக்குதிரையை அடக்குபவருக்கு பரிசு அறிவிக்கப்பட்டது. அதில், ராஜா தேசிங்கின் தந்தை தோல்வி கண்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததை அறிந்து அடக்கி வென்றதாக கதை கூறப்பட்டுள்ளது. இலக்கியங்களில் எடுத்துக்காட்டு தருகிறது. தொல்காப்பிய நுாற்பா விளக்கம், கதை பாடலுக்கு பொருத்தமாக தரப்பட்டுள்ளது. தேசிங்கின் குதிரையிடம் உரையாடல் நெஞ்சை உருக்குகிறது. ஒன்பது சுவைகள் தனி தலைப்பிட்டு விளக்கப்பட்டுள்ளன. ஆய்வாளர்களுக்கு பயன்படும் நுால். – புலவர் ரா.நாராயணன்




