/ ஆன்மிகம் / ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்
ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்:176) மனிதப் பிறப்பின் பயன் - கடவுளைக் காண்பதே என்று சொன்னவர் ராமகிருஷ்ணர். கல்லூரி தந்த ஞானம் கைவிட, "கடவுள் எங்கே? கடவுளைப் பார்க்க முடியுமா? என்ற ஆன்மிக தாகத்துடன் அலைந்தார் விவேகானந்தர். அவருக்குக் கடவுளைக் காட்டி, வேதக்கடல் ஆழம் காட்டி, வேதாந்தச் சிகரத்தையும் காட்டினார் பகவான் ராமகிருஷ்ணர்.நீங்கள் அந்த நிலையை எட்ட வேண்டுமா? பகவான் ராம கிருஷ்ணர் சொன்ன இந்த கதைகளையும் படியுங்கள். சுயநலம் கருதாத தன்மை, பரிசுத்தம், சன்மார்க்கம் இவை இருந்தால் இறை அனுபவம் கிடைக்கும். ஆன்மிக அனுபவங்களை அடைய வைக்கும் ஆற்றல் உள்ளவை - பகவானின் கதைகள்.