/ சட்டம் / சம்பளத்திற்கான வருமான வரிச் சட்டம்

₹ 125

வருமான வரிச் சட்டத்தின் படி, தனிநபரின் மொத்த வருமானம் என்பது எந்தெந்த ஆதாரங்களில் இருந்து வருகிறது என்பதை கணித்து, வருமான வரி கணக்கிடுவது, விலக்கு பெறுவது குறித்த விபரங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ள நுால். விவசாய வருமானத்தில் எவை வருமானத்துடன் சேர்க்கப்படும் என்பதும் பட்டியலிடப்பட்டு உள்ளது. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் ஓய்வு பெறும்போது கிடைக்கும் பண பலன்களில், எவற்றுக்கு வருமான வரி விதிக்கப்படும் என்பதும் விளக்கப்பட்டுள்ளது. சம்பளதாரர், பொதுத்துறை அலுவலகங்கள், தனியார் துறை அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள், வணிகர் மற்றும் தொழில் புரிவோர் தங்கள் வருமான வரியை கணக்கிடுவதற்கான வழிமுறைகள் எளிய முறையில் புரியும் வண்ணம் விளக்கப்பட்டுள்ளன. வருமான வரி செலுத்துவோருக்கு பயன்படும் அரிய நுால்.– புலவர் சு.மதியழகன்


முக்கிய வீடியோ