/ கட்டுரைகள் / சமூகவியல் பார்வையில் தொல்காப்பியம்

₹ 300

தொல்காப்பியர் நுாற்பா திறத்தை உணர்த்தும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். இலக்கணம், பேச்சு வழக்கு அடிப்படையில், தொல்காப்பியர் பிறந்த பகுதியை நிர்ணயம் செய்துள்ளது. யாப்பருங்கல விருத்தி, நவநீதப்பாட்டியலில் வந்துள்ள மேற்கோள்கள் பிற்காலத்தில் ஏற்பட்டதாக இருக்க வேண்டும் என கருத்துத்துரைக்கிறது. ‘காமம் சான்ற கடைக்கோல் காலை’ என்ற பாவில் உரையாசிரியர்கள் கருத்தை ஏற்காமல், ஆண், பெண் துறவை குறிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. ‘வடவேங்கடம்’ என்ற கட்டுரை, தமிழக எல்லையை பண்டை காலத்தில் கேரளம், கன்னடம், ஆந்திராவின் ஒரு பகுதி என சான்றுகளுடன் விளக்குகிறது. தமிழறிஞர்கள் கொண்டாட வேண்டிய ஆய்வு நுால். – ராம.குருநாதன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை