/ பழமொழிகள் / சான்றோர்களின் பொன்மொழிகள்
சான்றோர்களின் பொன்மொழிகள்
பொன்மொழிகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். ஒருவர் பேசத் துவங்கும் போது அமைதியாக கேட்பவருக்கு ஏற்படும் தாக்கத்தை வலியுறுத்துகிறது. அது, எதிர்மறை எண்ணத்தை அகற்றும் திறனுள்ளது என்பதை தெளிவாக குறிப்பிடுகிறது. அன்பு நிறைந்த செயல்களை ஊக்குவிக்கவும், மனிதநேய விழுமியங்களை வளர்க்கவும் பயன்படும் என்கிறது. தலைவர்கள் ஆற்றிய உரையின் தாக்கங்களை நினைவூட்டுகிறது. ஜவஹர்லால் நேரு, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் போன்ற புகழ் பெற்றவர்கள் பேச்சில் இருந்து ஞானத்தை சேகரித்து தருகிறது. பொது நலனுக்காக உழைப்பதே எல்லையில்லா மகிழ்ச்சியின் ஊற்று என்பதை நினைவூட்டும் நுால். –வி.விஷ்வா