/ வரலாறு / சரித்திரம் சொல்லும் சிலைகள்

₹ 130

உலகம் முழுதும் உள்ள 25 சிலைகளின் வரலாற்றை எடுத்துரைக்கும் நுால். ஒரு பகுதியில் சிலை அமைக்க, வலுவான காரணம் இருப்பதை கூறுகிறது. ஆளுமைகளின் நற்பண்புகள், தியாகத்தை, சிலைகள் வழியாக பகிர்கிறது. சிலைகளின் கலை நயம், தனித்தன்மை, சிற்பியின் பின்னணி, சிலை உருவாக்க எடுத்துக் கொண்ட காலம், செலவு போன்ற விபரங்களை சொல்கிறது. காலணிக்கு சிலை இருப்பதை வியப்புடன் கூறுகிறது. குண்டு வெடிப்பில் உருக்குலைந்து, புதுப்பொலிவு பெற்ற சிந்தனையாளர் சிலையின் தனித்தன்மையை பகிர்கிறது. எகிப்தின் அடையாளமான ஸ்பிங்ஸ் சிலையின் தனித்துவத்தை பேசுகிறது. புத்தரின் கை சிலை வடிவம், புருவம் உயர்த்த வைக்கிறது. சிலைகளை நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்தும் நுால்.– டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை