/ கட்டுரைகள் / செவரல் ஹன்ட்ரட் ரூட்ஸ் & டிபரன்ட் டிரிப்ஸ் -(ஆங்கிலம்)
செவரல் ஹன்ட்ரட் ரூட்ஸ் & டிபரன்ட் டிரிப்ஸ் -(ஆங்கிலம்)
வாழ்க்கை வாழ்வதற்கே என்ற அடிநாதம் கொண்டு படைக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஒரு பொருளை தொலைவிலிருந்து பார்த்தால் சிறிதாக இருக்கும். அதையே அருகில் பார்த்தால் பெரியதாக இருக்கும். பொருளின் அளவு பார்வை துாரத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது. அளவு மாறுபடவில்லை என்ற உண்மையை வாழ்க்கையுடன் பொருத்திக் காட்டுகிறது.வெற்றிக்கு முயற்சியும் உழைப்பும் தேவை என்றாலும், அது சூழ்நிலையின் அடிப்படையில் தான் அமைகிறது என்பதை எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தனித்துவத்தை எப்போதும் பின்பற்ற முடிவதில்லை. முகம் மூடியே வாழ்கிறோம். இதற்குள் இருக்கும் வாழ்க்கையை உணர்த்தும் நுால். – முகிலை ராசபாண்டியன்