/ சிறுவர்கள் பகுதி / சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் – 1
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் – 1
ஆங்கில இலக்கிய சக்கரவர்த்தி ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் கதை வடிவில் தொகுக்கப்பட்டுள்ள நுால். சிறுவர்களும் படித்து பயனுற வேண்டும் என்ற நோக்கில், சார்லஸ் லாம் உருவாக்கியது; தமிழில் மொழிபெயர்த்து தரப்பட்டிருக்கிறது.வெனிஸ் வணிகன், விரும்பிய வண்ணமே, மாக்பெத், லியர் மன்னன், ஹாம்லெட், ஒதெல்லோ போன்ற தலைப்புகளில், 11 கதைகள் தரப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் ஆறு சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, உப தலைப்புடன் அமைத்திருப்பது அருமை. வசன நடையில் சில தரப்பட்டுள்ளன. முதலில் கதை சுருக்கத்தை பகிர்ந்துள்ளதால் வாசிக்க உதவியாக இருக்கிறது. காலத்தால் அழியாத நாடகக் கதைகள் வசீகரிக்கின்றன. எல்லா வயதினருக்கும் ஏற்ற நுால்.– ஊஞ்சல் பிரபு