/ கதைகள் / ஷாலினி சமந்தா

₹ 140

மனிதர்களின் பல்வேறு குணாதிசயங்களை படம் பிடிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தோழியரான மதுபாலா, மணியரசி குணங்கள், அவரவர் குடும்பத்தில் வெவ்வேறாக இருக்கின்றன. ஒரு கட்டத்தில் இரு குடும்ப திருமண பந்தம் குறித்து பேசப்படுகிறது. அவை குணங்களால் அமைந்ததா என, ‘பெண் என்றால்’ கதை சிந்திக்க வைக்கிறது. கோதுமை வியாபாரத்தில் நடக்கும் பித்தலாட்டங்களை, ‘ரேஷன் கோதுமை’ கதை சுட்டிக் காட்டுகிறது. குடும்ப வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக்கொள்ள, ‘ஆசிரமம்’ கதை வலியுறுத்துகிறது. அம்மா ஸ்தானத்தில் யாரும் இருக்க முடியாது என்பதை, ‘அம்மா போல’ கதை கூறுகிறது. லஞ்சம், ஓட்டு போட கையூட்டு பெறும் செயல், நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் என எச்சரிக்கும் நுால். – டி.எஸ்.ராயன்


சமீபத்திய செய்தி