/ ஆன்மிகம் / ஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்
ஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்
ஷீரடி சாய்பாபா நிகழ்த்திய அதிசயங்களைத் தொகுத்திருக்கிறார். சாய்பாபா என பெயர் வரக்காரணம், வியாழக்கிழமை விரதம், அதன் பலன் பற்றிய விளக்கங்களை எளிமையாகப் படிக்க முடிகிறது. ஷீரடிக்கு எப்படி செல்வது, எங்கு தங்குவது, அதைச் சுற்றியுள்ள, 23 முக்கிய இடங்களைச் சுற்றிப் பார்க்க வசதியாக தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சனீஸ்வரர் கோவில் உள்ளது போன்ற தகவல்கள் புதுமை. பாபாவுடன் இருந்த, 12 அருளாளர்கள் பற்றிய குறிப்பும் இடம் பெற்றுள்ளது. பாபா தினமும் பிச்சை எடுத்தே உண்பார். உணவளித்த பாயிஜபாயி அம்மையாருக்கு பாபாவின் மீது அளவற்ற பக்தி. சில நேரம், காட்டில் தியானத்தில் ஆழ்ந்து விடுவார் பாபா. தியானத்தில் சமாதி நிலையில் இருப்பவருக்கு வலுக்கட்டாயமாக உணவூட்டுவார் போன்ற தகவல்கள் பக்தி நீரை கோர்க்கின்றன.– தி.செல்லப்பா