/ கதைகள் / சிங்கம்பட்டி ஜமீன் கதை
சிங்கம்பட்டி ஜமீன் கதை
தமிழகத்தின் தென்பகுதியில் சிங்கம்பட்டி ஜமீன் வரலாற்றை தொகுத்து கூறும் நுால். நேரடியாக களஆய்வு செய்து ஜமீனின் தற்போதைய நிலையையும் எடுத்துரைக்கிறது.தமிழகத்தில் குறுநில அரசாக திகழ்ந்தது சிங்கம்பட்டி. இதன் பாரம்பரிய வரலாற்று நிகழ்வுகள், 17 தலைப்புகளில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. ஜமீன் உருவாகி செயல்பட்டது கதை போல் கூறப்பட்டுள்ளது.குறுநிலத்தை ஆட்சி செலுத்திய மன்னர்கள், வாரிசுதாரர்கள், தற்போதைய உரிமைக்குரியவர் என தகவல்கள் திரட்டித் தரப்பட்டுள்ளன. குறுநில ஆட்சி முத்திரை, அரண்மனையின் உள்ளடக்கம் உட்பட படங்களுடன் தரப்பட்டுள்ளது. சிங்கம்பட்டி ஜமீன் செயல்பாடுகளை விவரிக்கிறது. மன்னர் கால ஆட்சியை எடுத்துரைக்கும் வரலாற்று நுால்.– மதி