/ பழமொழிகள் / சிறந்த பழமொழிகளும் சுவையான விளக்கங்களும்
சிறந்த பழமொழிகளும் சுவையான விளக்கங்களும்
வாழ்க்கையை சரியான பாதையில் நகர்த்தி செல்ல உதவும் தன்னம்பிக்கை நுால். மனித மனங்கள், சுபாவங்கள் குறித்து, 83 தலைப்புகளில் எளிய நடையில் உள்ளன. பயத்தை ஏன் வெளிக்காட்டக் கூடாது; பேராசையால் வரும் வினைகள்; கடுமையான வார்த்தைகளால் ஏற்படும் காயம்; நல்லவர்களோடு ஏன் நட்பு வைத்திருக்க வேண்டும்; காக்கை போல் ஏன் கூடி வாழ வேண்டும் போன்ற கேள்விகளுக்கு, பழமொழி வழியாக விளக்கம் பெற முடியும்.அறிவை விட எப்படி அனுபவம் சிறந்தது என்பதை விளக்குகிறது. பிரச்னைகளை ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்ள உதவும் நுால்.– டி.எஸ்.ராயன்