/ சிறுவர்கள் பகுதி / சிறார்கள் கொண்டாட்டம் சித்திரைத் திருவிழா

₹ 300

மதுரை அடையாளமான சித்திரை திருவிழா மகத்துவத்தை கூறும் நுால். கவிதை, சிறுகதை, கட்டுரை கோணத்தில் திருவிழாவை விவரிக்கிறது. குழந்தைகளின் கொண்டாட்டம் வாயிலாக ஆன்மிகம், பாரம்பரியம், கலாசாரம் கடந்து குடும்ப நிகழ்வாக சொல்கிறது. சிறுவர்கள் கடவுள் வேடமிட்டு அருள் வாக்கு சொல்வது, மகளை சாமியாக பார்க்கும் தந்தையின் நம்பிக்கையை கூறுகிறது. சிறுவருக்கு பிடித்தமான தின்பண்டங்கள், விளையாட்டு பொருட்கள் காத்திருந்து வாங்குவதை, பொருளாதார பார்வையில் விவரிக்கிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு தேவையான வாசனை திரவியங்கள், அபிஷேக பொருட்கள் பற்றி கூறுகிறது. திருவிழா கால மதுரையை கண்முன் நிறுத்தும் நுால். – டி.எஸ்.ராயன்


முக்கிய வீடியோ