/ புத்தக மதிப்புரை / சித்தர் இறைநெறி

₹ 130

சித்தர்களின் இறைநெறி தொண்டு குறித்து விவரிக்கும் நுால். குருவோடு பெற்ற அருள் அனுபவங்களை எளிமையாக தொகுத்து தருகிறது. சார்பு நுால்களிலிருந்து சாரத்தை பிழிந்தெடுத்து, கருத்தியலோடு மக்கள் அறியும் வண்ணம் சொல்லப்பட்டிருக்கிறது. இறைவன் ஒருவனே, இறைவன் இருக்குமிடம், கடவுள் உண்டு என்பதை நிறுவும் ஒன்பது சான்றுகளோடு தரப்பட்டுள்ளது. சித்தர் என்ற சொல்லை சித்ஞானம் என விளக்கி, தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படும் அறிவர்களே சித்தர் என எடுத்துக் காட்டியிருப்பது புதிய செய்தி. கோவிலில் கொடி மரம், பலி பீடம், கருவறை மூலவரை, பிண்டமாகிய உடலில் கண்டு தரிசித்து, மக்களுக்கு இறைநெறியை உணர்த்தியவர்கள் சித்தர் என நிறுவுகிறது. சித்தர்கள் பற்றிய ஆய்வாக மலர்ந்துள்ள நுால். – ஊஞ்சல் பிரபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை