/ ஆன்மிகம் / அறுபத்து மூன்று நாயன்மார் கதைகள்

₹ 20

நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை, அலங்காரம் மிக்க நடையில் அற்புதமாக சொல்லும் நுால். பெரியபுராணம் எப்படி படைக்கப்பட்டது என்பதை அறிய தருகிறது. இதை எழுதியதற்கான காரணமும் உரைக்கப்பட்டுள்ளது. அரிவாட்டாய நாயனாரின் படையலில் மாவடு இருந்ததையும், அவர் சிவபதம் அடைந்த விதமும் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இயற்பகை நாயனாரின் சிவபக்தி சிலிர்க்க வைக்கிறது. மனைவி ஊடலை தீர்க்க, சிவனையே துாதனுப்பிய சுந்தரர் மீது கோபம் கொண்ட ஏயர்கோன் கலிக்காம நாயனார், ஈசனால் ஆட்கொள்ளப்பட்டதை விவரிக்கிறது. கண்ணப்ப நாயனார் சிவபக்தி சொல்லப்பட்டுள்ளது. சிவனடியார்கள் பாதுகாக்க வேண்டிய நுால். – டாக்டர் கார்முகிலோன்


சமீபத்திய செய்தி