/ சுய முன்னேற்றம் / மென்மையான பேச்சு மேன்மை தரும்

₹ 70

சுய முன்னேற்றம் குறித்த நுால். பேச்சின் வழியாக வாழ்வில் நிகழும் செயல்கள், 38 தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளன. சுருக்கமான பேச்சு பிறருக்கு பயன்பட்டு பெருமை சேர்க்கும் என்பது, ‘சிறந்த பேச்சின் தற்போதனை’ என்ற தலைப்பில் விளக்கப்பட்டுள்ளது. மரியாதை கிடைக்க வேண்டும் என்றால், மவுனத்தை பழகிக்கொள்ள வலியுறுத்துகிறது. வீண் பேச்சு விபரீதத்தை ஏற்படுத்தும்; வெட்டி பேச்சால் நேரம் வீணாகும் என்பதை சான்றுடன் விளக்குகிறது. நல்ல உச்சரிப்பு உயர்வை தரும்; சிறந்த பேச்சு காதுகளுக்கு உணவாகும் என்ற அடிப்படை விளக்கப்பட்டுள்ளது. சாதுரியமற்ற பேச்சின் ஆபத்துகளையும் எளிமையாக விளக்குகிறது. பேச்சு மீது கவனம் வைக்க அறிவுறுத்தும் நுால். – வி.ராமலிங்கம்