/ வாழ்க்கை வரலாறு / ஸ்ரீதர் வேம்பு சாதனை வாழ்க்கை
ஸ்ரீதர் வேம்பு சாதனை வாழ்க்கை
தகவல் தொழில்நுட்பத்துறையில் சாதனை படைத்தவர் வாழ்க்கை வரலாற்று நுால். கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து உலகே வியக்கும் வண்ணம் உயர்ந்தவரின் பயணத்தை பறைசாற்றுகிறது.தகவல் தொழில்நுட்பத் துறையில் சாதனை நிறுவனமான ஸொகோவை உருவாக்கியவர் ஸ்ரீதர் வேம்பு. லட்சியமிக்க அவரது பயணக் கனவு, நனவான விதத்தை விவரிக்கிறது. வாழ்வில் சந்தித்த இடர்கள், சிக்கல்களை எதிர்கொண்ட விதம், தொழில்நுட்பத்துறையில் ஏற்படுத்திய மாற்றங்களை தெளிவாக எடுத்து உரைக்கிறது. சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு நல்ல பாடமாக அமைந்துள்ள நுால்.– ராம்