/ ஆன்மிகம் / ஸ்ரீமத் பகவத் கீதை ஜீவதத்துவ விளக்கங்கள்

₹ 225

பகவத் கீதையை பாமரரும் அறியும் வகையில் விளக்கங்களுடன் அமைந்த நுால். துவக்கத்தில் பகவத் கீதை குறித்த முன்னோட்டம் அளிக்கப்பட்டுள்ளது. நான்கு வேதங்களும், அவற்றுக்கான பொருள் குறித்த பட்டியலும் உள்ளன. அர்ச்சுனன், துரியோதனன், திருதராஷ்டிரன் மனநிலையை குறிப்பிடும் வகையில் விளக்கம் தரப்பட்டுள்ளது. மனக்குழப்பம் போக்க, யோகத்தைப் பற்றி கிருஷ்ணர் எடுத்துரைப்பது விரிவாக உள்ளது. பாவம் பற்றியும், அதற்கு கிருஷ்ணர் கூறும் விளக்கங்களும் எளிய நடையில் கூறப்பட்டுள்ளன. யாகங்கள் செய்வதால் கிடைக்கும் பலன்களும், அதற்கு விளக்கமும் உள்ளன. யோகம் பற்றி விளக்கம் அளித்து பயிலும் முறையும் கூறப்பட்டுள்ள நுால். – முகில்குமரன்


புதிய வீடியோ