/ கதைகள் / எஸ்.எஸ்.தென்னரசு சிறுகதைகள்
எஸ்.எஸ்.தென்னரசு சிறுகதைகள்
நேரில் பார்த்த நிகழ்வுகள் அடிப்படையிலான சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொன்றும் உண்மைக்கு நெருக்கமாய் இருக்கிறது.மொட்டை கடுதாசியிலிருந்து விசாரணையை துவங்கி, கொலையை நேர்மையாக துப்பு துலக்கும் இன்ஸ்பெக்டர் இன்னாசி முத்து, இறுதியில் நிகழும் திருப்பத்தை அரசியல் நிகழ்வுடன் அருமையாகச் சொல்கிறது அருந்ததி கொலை வழக்கு கதை.மகள் திருமணத்தன்று காணாமல் போனவர் கொல்லப்பட்டிருப்பார் என்று சாமிதுரையை கைது செய்யும் போலீசின் நடவடிக்கைகளும், விசாரணை விபரங்களும், அப்ரூவராகும் நேரடி சாட்சியங்களும், துாக்கு தண்டனை விதிக்கும் நீதிமன்றம், விடுதலை செய்யும் உயர் நீதிமன்றம் என குற்ற வழக்கை பார்த்த உணர்வை தருகிறது, கையாள் சிறுகதை.– ஊஞ்சல் பிரபு