/ கவிதைகள் / கதைகள் + விதைகள் = கவிதைகள்
கதைகள் + விதைகள் = கவிதைகள்
உருக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். உலுக்கும் கவிதைகளும் உண்டு. கைகேயி இரண்டு வரங்களால் ராமனை காட்டுக்கு அனுப்புகிறாள். நாடு திரும்பிய ராமனிடம் இரண்டு வரங்கள் கேட்கிறான் பரதன். மீண்டும் முதலில் இருந்தா என்று திகைக்க வைக்கிறது. எந்த ராமாயணத்திலும் இல்லாத காட்சி கவிஞரின் கற்பனையில் கவிதையாக மலர்கிறது. இலங்கை செல்ல பாலம் கட்டும் வேலை நடக்கிறது.ராமனும் ஒரு கல் போடுகிறான். அது மூழ்கி விடுகிறது. அதற்கு அனுமன் விளக்கம் தருகிறான். ‘இறைவா, நீ எங்கள் தாய். நீயே கைவிட்டால் சம்சாரக் கடலில் மூழ்க வேண்டியது தான்’ என்கிறது. வாழ்க்கை போக்கை மாற்றும் நுால். – வரலொட்டி ரெங்கசாமி