/ கதைகள் / தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்
தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்
தமிழக பண்பாட்டு ஆவணமாகத் திகழும் நுால். கற்பனை கதைகள், இதிகாச புராணங்கள், மதம் – மந்திரம், வழக்கம் – மரபுகள், தேர் – திருவிழா, வாய்மொழி – இலக்கியம், பாமரர் இசை – நடனம், தெருக்கூத்து என விளக்கமாகக் கூறுகிறது. முதல் கட்டுரையில் பழங்குடி மக்களின் திணை வாழ்க்கை, தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர் வரலாறை சுருக்கமாகச் சொல்கிறது. பண்டை காலந்தொட்டு நிலவி வந்த புராண இதிகாசச் செய்திகள் இரண்டாவது பகுதியில் இடம் பெற்றுள்ளன. மத நல்லிணத்தின் வழி தேசிய ஒருமைப்பாடு, பழங்கால நம்பிக்கை குறித்த தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நாட்டுப்புறப் பாடல்கள், இசை, நடனம், விளையாட்டுகளை விரிவான எடுத்துக்காட்டுகளுடன் சிறப்பாக விளக்கும் நுால்.– ராம.குருநாதன்




