/ இலக்கியம் / தமிழ்ப் பண்பாடும், இலக்கியச் சிறப்புகளும்
தமிழ்ப் பண்பாடும், இலக்கியச் சிறப்புகளும்
தமிழ்ப் பண்பாட்டை அறிந்து கொள்ள தமிழ் இலக்கியங்களை நாடுவதே சரியான வழிமுறை என்று கூறும் நூல்; இரு பிரிவுகளாக அமைந்துள்ளது.முதல் பிரிவில் கட்டுரைகள் நடப்பியலைச் சுட்டிக்காட்டித் தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன. இரண்டாம் பிரிவில் குறள், கம்பராமாயணப் பாடல்களுக்கு உரை விளக்கம் தரப்பட்டு உள்ளன.கம்பராமாயண வினா–விடை, பன்னிரு திருமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் இலக்கியச் சுவை தருகின்றன.ஆங்கிலச் சொற்களை பேச்சு வழக்கில் எவ்வாறெல்லாம் கையாளுகிறோம். அதற்கு மாறாக பயன்படுத்த வேண்டிய தமிழ்ச் சொற்களை தந்து பெருமை பேசுகிறது. தமிழ்மொழியின் பெருமை பேசும் நூல்.– முனைவர் இரா. பன்னிருகை வடிவேலன்