/ கவிதைகள் / தமிழ்ப்பா மஞ்சரி
தமிழ்ப்பா மஞ்சரி
தமிழறிஞர் உ.வே.சா., எழுதிய கவிதைகளின் தொகுப்பு நுால். விரிவான முன்னுரையுடன் உள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. உ.வே.சா.,வின் துதிப்பாடல்கள் முதலில் தொகுக்கப் பட்டுள்ளன. அடுத்து தனிப்பாடல்களும், மொழிபெயர்ப்பு பாடல்களும் இடம்பெற்றுள்ளன. பதிப்பு நுால்களுக்கு எழுதியவையும் குறிப்பிடத்தக்கதாக உள்ளன. வரலாற்றில் பதிவாக வேண்டிய ஆவணங்களாக உடன் பழகியோர் குறித்த பாடல்கள் அமைகின்றன. மடாதிபதிகள், அறிஞர்கள், நீதிபதிகள், கவர்னர், புகழ்பெற்ற வழக்கறிஞர்கள், பெருங்கவிஞர்கள், வள்ளல்கள், பேராசிரியர்கள் என பழகிய அருந்தலைவர்கள் பற்றிய செய்திகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. – சிவா




