/ இசை / தமிழர் நாட்டுப்புற இயல் களஞ்சியம்
தமிழர் நாட்டுப்புற இயல் களஞ்சியம்
வளர்ந்து வரும் நாட்டுப்புறவியல் துறையில் தமிழர் களஞ்சியமாக மலர்ந்துள்ள நுால். பரந்து விரிந்த பார்வையுடன் ஆய்வுத் தகவல்களை தருகிறது.உலக அளவில் நாட்டுப்புறவியலின் தோற்றம், வளர்ச்சி துவங்கி, 11 இயல்களாக பகுத்து செய்திகளை தருகிறது. தமிழகத்தில் தொல்காப்பியர் காலம் முதல் இன்று வரை, இந்த துறை வளர்ந்துள்ளதை விரிவாக பேசுகிறது.நாட்டுப்புற இலக்கியங்கள், செவ்விலக்கியங்களுக்கு உள்ள உறவு பற்றியும் தகவல்களை தருகிறது. கூத்துக்கலை, நாட்டுப்புற இசை வடிவங்கள், தமிழரின் மரபு விளையாட்டுகளை முறைப்படுத்தி ஆராய்ந்து கருத்துக்களை பகிர்கிறது. தமிழர்களின் நாட்டுப்புறவியல் களஞ்சியமாக மலர்ந்துள்ள நுால்.– ராம்