/ கட்டுரைகள் / தமிழர் உறவு முறைகளும் சமயமும் வழிபாடும்
தமிழர் உறவு முறைகளும் சமயமும் வழிபாடும்
தமிழர் சமயம், வழிபாடு, உறவு முறைகள் குறித்து எழுதப்பட்டுள்ள சுவையான கட்டுரைகளின் தொகுப்பு நுால். பேராசிரியர் நா.வானமாமலை பற்றிய விபரமும் தனியாக இடம் பெற்று உள்ளது. மொத்தம், 27 தலைப்புகளில் தகவல்கள் உள்ளன. முதலில், ‘பெண் பூசாரிகளும் தாய் தெய்வ வழிபாடுகளும்’ என்ற தலைப்பில் தகவல்கள் உள்ளன. கோவில்களில் தேவரடியார் என்ற பெயரில் பெண்கள் செய்த சேவை பற்றி விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.பழந்தமிழ் இலக்கியங்களை மேற்கோள் காட்டி, அரிய செய்திகளை தந்துள்ள நுால்.– மலர்