/ கட்டுரைகள் / தமிழின்பம்

₹ 250

சாகித்திய அகாடமி விருதை முதன்முதலில் பெற்ற நுால். தமிழ் மொழி மற்றும் வாழ்வின் பண்பாட்டு சிறப்பை தக்க உதாரணங்களுடன் அறிய தருகிறது. மேடைப்பேச்சு, இயற்கை இன்பம், காவிய இன்பம், கற்பனை இன்பம், அறிவும் திருவும், மொழியும் நெறியும், இருமையில் ஒருமை, பாரதியார் பாட்டின்பம் என்ற தலைப்புகளில் புத்தகம் அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு தலைப்பிலும் பல்வேறு பொருண்மைகள் உடைய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தமிழ் மொழி இலக்கியங்களில் உள்ள அழகியல், பொருள் செறிவு குறித்து எடுத்துரைக்கிறது. தமிழர் வாழ்வில் கடைப்பிடிக்கும் பண்பாடு, நாகரிக சிறப்புகள் பற்றி அறியத் தருகிறது. தமிழ் மொழி மற்றும் தமிழர் வாழ்க்கை குறித்து இலக்கியம் மற்றும் வரலாற்று பின்னணியுடன் அமைந்துள்ள நுால். – மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை