/ பயண கட்டுரை / தகடூர் யாத்திரை
தகடூர் யாத்திரை
தகடூரை சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறை அழித்த வரலாற்றை கூறும் நுால். பெருஞ்சேரல் – அதியமான் இடையே நிகழ்ந்த போர் குறித்து பேசுகிறது. சங்கப் பாடல்களை போலவே அமைந்துள்ளது. சங்ககால மன்னர்கள் வரலாற்றோடு தொடர்புடைய புறநானுாற்றுப் பாடல்கள் ஆங்காங்கே இணைத்துக் காட்டப்பட்டுள்ளன. புறத்திரட்டில் உள்ள 48 பாடல்களுக்கும் தனித்தனி தலைப்பு தந்து விளக்கப்பட்டுள்ளது.கொங்கு நாடு, இரும்பொறை, அதியமான் எழினி பற்றிய வரலாற்றுத் துளிகள் உள்ளன. சங்ககால போர்க் காட்சிகளை உணர்த்தும் நுால். – ராம.குருநாதன்