/ வாழ்க்கை வரலாறு / தனித்தமிழ்த் தந்தையின் வரலாற்றுச் சுவடுகள்

₹ 500

தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலையடிகள் வாழ்க்கை வரலாற்று நுால். பிற மொழிகள் மீது பகைமை பாராட்டாத பண்பை விளக்குகிறது. ஆங்கிலம், சமஸ்கிருத மொழிப்புலமையை அறியத் தருகிறது. ஜோதிடம், மருத்துவம், ஹிப்னாடிசம், தொலைவில் உணர்தல், மறைபொருளியல் துறைகளில் கவனம் பெற்றிருந்ததை அறிய வைக்கிறது. சமய மறுமலர்ச்சிக்கு தொண்டாற்றியதுடன், மூடப்பழக்கங்களை எதிர்த்ததை எடுத்துக்கூறுகிறது. தமிழறிஞர்களுடன் திருவள்ளுவர் ஆண்டை உருவாக்கிய செய்தியும் பதிவிடப்பட்டுள்ளது. அடிகளாரின் பன்முகத்திறனை அறிய உதவும் நுால்.– புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை