/ சுய முன்னேற்றம் / தன்னம்பிக்கை விழுதுகள்
தன்னம்பிக்கை விழுதுகள்
இளைய சமுதாயத்தைத் தட்டி எழுப்பும் தன்னம்பிக்கை நுால். முடியும் என்ற சிந்தனையை விதைக்கிறது. இளைஞர்களுக்கு அன்பு, அரவணைப்பு, பண்பு, படிப்பு என எல்லாம் கிடைத்து விடுகிறது. ஆனால் உந்து சக்தி, ஊக்க சக்தி மட்டுமே எட்டாத ஒன்றாகிவிட்டது. அத்தகைய ஊக்க மருந்தாக விழி, எழு, நட, ஓடு, செய் என தட்டி எழுப்புகிறது. படுத்துக் கிடப்பவனுக்கு பகல் கூட இரவு தான்; எழுந்து உழைப்பவனுக்குத் திசையெல்லாம் கிழக்குதான். விழித்து எழுந்தவுடன் கிடைப்பதில்ல வெற்றி; விழுந்து எழுந்தவுடன் கிடைப்பதுதான் வெற்றி போன்ற, 13 தலைப்புகளில் ஊக்கமூட்டும் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. முன்னேற விரும்புவோர் படிக்க வேண்டிய நுால். – புலவர் சு.மதியழகன்