/ சமயம் / தாயின் காலடியில் சொர்க்கம்

₹ 150

இஸ்லாம் மதம், பழக்க வழக்கம், ஒழுக்கம், நோன்புகள் குறித்த தகவல்களை உள்ளடக்கிய சிறுகதைகளின் தொகுப்பு நுால். ரசிக்கும்படி எழுதப்பட்டுள்ளது. முதல் சிறுகதையாக வரும், ‘பைத்துல் மால்’ பள்ளிவாசலில் உள்ள உதவும் நிதி அமைப்பு குறித்த தகவல்கள் பயனுள்ளவாறு தருகிறது. இஸ்லாமியர்களில், குழந்தைகளை படிக்க வைக்க முடியாமல் திணறுவோருக்கு வட்டியின்றி பணம் கொடுத்து, உதவுவது பற்றிய நடைமுறை கூறப்பட்டுள்ளது.திருமணப் பொருத்தம் குறித்த கதையில், மணமகனிடம் கேள்வி கேட்டு மனநிலையை அறிந்து, இல்லற வாழ்க்கை பிரச்னையின்றி இருக்க வழிகாட்டப்பட்டுள்ளது. தொழுகைக்கு சென்றவருக்கு கிடைத்த பரிசை மறுத்த காரணம் யோசிக்க வைக்கிறது. இஸ்லாம் பற்றிய தகவல்களை உடைய சிறுகதை நுால். – முகில் குமரன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை