/ சிறுவர்கள் பகுதி / மாவீரன் சுண்டெலி

₹ 240

உலகின் பிரபலமான நாடோடி கதைகளின் மொழிபெயர்ப்பாக மலர்ந்துள்ள நுால். சிறுவர்களுக்கு உகந்த வகையில் உள்ளது. உலகில் பல நாடுகளில் பிரபலமாக உள்ள 20 கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. கற்பனையின் உச்சமாக மலர்ந்துள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் பண்பாட்டு சிறப்பை கண்முன் காட்டுகிறது. துணிச்சல், நம்பிக்கை, விடா முயற்சி, வாய்மை தவறாமை போன்றவற்றால் ஏற்படும் விளைவு களை எடுத்துக்கூறுகின்றன. குதுாகலிக்க வைக்கும் கதா பாத்திரங்கள் நிறைந்துள்ளது. சிறுவர்களுக்கு நற்சிந்தனை ஊட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். – ராம்