/ கதைகள் / கொள்ளை இங்கே! குற்றவாளி எங்கே?

₹ 100

சிறையில் நடந்த பதிவு திருமணத்தை மையமாக வைத்து புனையப்பட்ட நாவல் நுால். திருமணத்தில் வரதட்சணை கொடுக்க வைத்திருந்த 50 சவரன் நகை திருடு போகிறது. அதனால் திருமணம் நிற்கிறது. திருடியவனே நகைகளை ஒப்படைக்கிறான்; வரதட்சணையும் ஒரு வகை திருட்டு என்ற கருத்தை தெரிவிக்கிறான். பின், வரதட்சணை கேட்போர், கொடுப்போரிடம் திருடுகிறான். அது மட்டுமல்ல, ஏழைகளுக்கு கடன் கொடுக்காத வங்கி அதிகாரி வீட்டிலும் திருடுகிறான். போலீஸ் மோப்பம் பிடிக்கிறது. பிடிபட்டதும் செய்தது சரி என வாதிடுகிறான். இப்படி போகிறது கதை. காவல் நிலையங்கள் எப்படி செயல்பட வேண்டும், உளவுத்துறை எப்படி செயல்பட வேண்டும் என்றெல்லாம் விவாதித்து கருத்து சொல்லும் குறுநாவல். – சீத்தலைச் சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை