/ வரலாறு / விமான நிலையத் தொழிற்சங்கத் தலைவரின் மறக்க முடியாத நாட்கள்!
விமான நிலையத் தொழிற்சங்கத் தலைவரின் மறக்க முடியாத நாட்கள்!
விமான நிலைய தொழிற்சங்க அமைப்பில் உச்சம் தொட்டவரின் நினைவுகளை தொகுத்து தரும் நுால். நிகழ்வுகளுக்கு ஏற்ப படங்களும் உள்ளன. அரசு, ஆன்மிகம், அரசியல், தொழிற்சங்க பணி என தொண்டு செய்ததை உணர்த்தும் வகையில் உள்ளது. பகைவனுக்கும் அருளிய போப்பை, துப்பாக்கியால் சுட்ட முகமது அலி அக்சாவை சிறையில் சந்தித்தது பற்றி விவரிக்கிறது. கல் உடைக்கும் தொழிலாளர் வாழ்வாதாரம் இழந்ததை கண்டு சமுதாய பணி செய்ததுகூறப்பட்டுள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்ட அறிவு ஜீவிகளை பொது பொறுப்புகளில் அமர்த்த வேண்டும் என்ற கனவு பகிரப்பட்டுள்ளது. சமூகத் தொண்டின் பரிணாமங்களை கூறும் நுால்.– சீத்தலைச்சாத்தன்