/ கட்டுரைகள் / தீயிலிருந்து பாதுகாப்பு

₹ 100

ஆசிரியர் : என்.சுப்ரமணிய பிள்ளைவெளியீடு : அருணா பப்ளிகேஷன்ஸ்அலைபேசி : 94440 47790தீயில் இருந்து பாதுகாப்பாக விலகியிருக்கும் வழிமுறைகளை கூறும் நுால். விபத்துக்களை தடுப்பது பற்றியும் விரிவான தகவல்களை தருகிறது.தீ நண்பனா, அரக்கனா என்பதில் துவங்கி, தீ விபத்து ஏற்பட்டால் முன்னெச்சரிக்கையாக செய்ய வேண்டியது வரை, தகவல்களை தொகுத்து எளிய நடையில் தருகிறது. எரிதல் வினை பற்றி அறிவியல் பூர்வமாக விளக்குகிறது. கட்டுப்படாத தீயை மட்டுப்படுத்துவது பற்றியும் தரப்பட்டுள்ளது.தீயின் வகைகளை பிரித்து அறிவூட்டுகிறது. விபத்தை கண்டறியும் முறையையும் உரைக்கிறது. தீ அபாயங்களை குறைக்கும் நடைமுறை விபரத்தை எடுத்துரைக்கிறது. தீ தடுப்பு அமைப்பு பற்றி விவரிக்கிறது. தீயின் தீவிரத்தை விளக்கி, சரியாக பயன்படுத்த ஆலோசனை தரும் நுால்.– ராம்


புதிய வீடியோ