/ கட்டுரைகள் / தெரிவு
தெரிவு
முற்போக்காக காட்ட முனைவோர் மனதில் உள்ள எண்ணங்களை தோலுரிக்கும் நுால். கதை மற்றும் கட்டுரை வடிவில் உள்ளது. குழந்தையை பெற்றுக் கொள்வதா, தத்தெடுப்பதா என்ற விவாதத்தில் சமூகம் கட்டமைத்துள்ள மரபுக்கு அஞ்சும் உளவியல் போராட்டம் விவரிக்கப்பட்டுள்ளது. தேர்ந்து தெளிந்த நட்பே ஏமாற்றம் தரும் என ‘தனிமை’ சிறுகதையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. நாய் குட்டியை சாக்கடையில் வீசிய பின், காப்பாற்றுவது போல வீடியோ போடும் ஈன புத்தியை சாடுகிறது. திரைப்படங்களில் குழந்தை வன்புணர்வு, பொருந்தா காதல் போன்ற காட்சிகளை கண்டிக்கிறது. துன்ப வாழ்க்கையை படைத்த கடவுளை சபிக்கிறது. சிந்தனையை நெறிப்படுத்தும் நுால். – புலவர் சு.மதியழகன்




