/ கவிதைகள் / திணைக்கொள்கை உருவாக்கமும் சடங்கியல் தொன்மவியல் மூலங்களும்
திணைக்கொள்கை உருவாக்கமும் சடங்கியல் தொன்மவியல் மூலங்களும்
சங்ககாலக் கவிதைகளை ஆராய்ந்து, பழந்தமிழர் வாழ்வை எடுத்துரைக்கும் நுால். சடங்குகள், தொன்மம் பற்றி விரிவாக ஆய்வு செய்து, புதிய கோணத்தில் கருத்துகளை தெரிவிக்கிறது.தொன்மவியல் பின்னணி, கவிதையில் இலக்கணம், நாட்டுப்புறவியல் ஆகிய கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. சடங்கு முறை, புராணக் கருத்து, பண்டைய கவிதை மரபு பற்றி அலசியுள்ளது. பழந்தமிழர் வாழ்வில் திணை கோட்பாட்டை மிக விரிவாக அலசி புரிய வைக்கிறது. கவிதையில் உள்ள இலக்கணம் மற்றும் நாட்டுப்புறவியல் மரபையும் முக்கியத்துவத்துடன் பேசுகிறது. பழந்தமிழர் வாழ்வை துல்லியமாக எடுத்துரைக்கும் ஆய்வு நுால்.– மலர்