/ வாழ்க்கை வரலாறு / திரும்பி பார்க்கிறேன்...
திரும்பி பார்க்கிறேன்...
பத்திரிகைகளில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவங்களை சுவாரசியமாக தந்துள்ள நுால். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வாழ்க்கைத் தொடரை எழுதியதில் சுவையான பின்னணி தகவல்கள் உள்ளன. மறைந்த எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளரை பேட்டி கண்டு எழுதியது குறித்த விபரங்களும் உள்ளன. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை சந்தித்த போது ஏற்பட்ட அனுபவமும் பதிவாகியுள்ளது. மலையாள நடிகர் மோகன்லால் தரையில் அமர்ந்து பேட்டி கொடுத்தது, நடிகை சில்க் சுமிதா டூவீலரில் படுத்து போஸ் கொடுத்தது, நிர்வாணப் படங்கள் வரையும் பெண் ஓவியரை சந்தித்தது என அனுபவங்களின் சாரமாக அமைந்துள்ள நுால்.– சூர்யா